கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

Must read

புதுக்கோட்டை: 
திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு  அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் எப். மென்ஸ் பட்ஜெட் (F men’s Budget) என்ற புதிய ரெடிமேட் ஷோரூம் இன்று காலை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக முதலில் வரும் குறிப்பிட்ட நபர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள சட்டை, 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்துக் கொண்டு துணி வாங்கிச் சென்றவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை. தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, கடையைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.
திறப்பு விழா சலுகை அறிவித்த  2 மணி நேரத்தில் அந்தக் கடைக்குச் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article