சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று   மேலும் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுபோல 39 உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.  தற்போதைய நிலையில், 65,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது, லாக்டவுன் போடலாமா  என்பது குறித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காதாரத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன்  சமீபத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

‘இதற்காக சேலத்தில் இருந்து சென்னை வருகை தந்துள்ள முதல்வர்,  முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தகுறுழரு.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் இரவு நேர ஊரடங்கு தொடர்பாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.