ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 70 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 6-ந்தேதி நிலவரப்படி 42 தெருக்களுக்கு மட்டுமே ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம், சீல் வைக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70-ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் ‘சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக் கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு என மொத்தம் 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.