சென்னை:

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல்  தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நேற்று 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த  எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்  1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேரும், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 22 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை  1,797 பேர்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது  1,861 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  848 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 21 பேர்  பலியாகி உள்ளனர். . தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  992 ஆக அதிகரித்துள்ளது.