மதுரை:
துரையில் வரும் 24ந்தேதி முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 2532  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  59,377 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 32,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்,  நேற்று 53 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  757 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று வரை  705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 381 பேர் குணமடைந்து உள்ளனர், 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  8 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரி வரும் கொரோனா காரணமாக  238 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைத்து, அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நாளை மறுதினம் (24ந்தேதி) முதல்  காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.