சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது 1,675 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 25,63,587 ஆக உயர்ந்துள்ளது. 34,102 பேர் இதுவரை பலியான நிலையில், இதுவரை 25,06,961 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநில தலைநகர சென்னையில் நேற்று 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,38,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலையில் இதுவரை 8,318 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 126 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,28,333 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,675 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஜூலை 31ஆம் தேதி 1569 ஆக உயர்ந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான நேற்று 1627 ஆனது. ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று இது 1675 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 5.38 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதயடுத்த சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை மக்கள் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால், மூன்றாவது அலை உறுதியாகிவிடும் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.