Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

பலி 7,745 ஆக உயர்வு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சமாக உயர்வு…

Jun 10, 2020

டெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.  நேற்று ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,76,583-ஆக அதிகரித்துள்ளது. அதுபோல நேற்று ஒரே நாளில் 279 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,745-ஆக உயா்ந்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 276583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 279 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 135206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.8 சதவீதமாக உள்ளது. நேற்று மட்டும் 5991 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 133632 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 90787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34914 பேருக்கும், டெல்லியில் 31309 பேருக்கும், குஜராத்தில் 21014 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மற்றும் வைரசை கட்டுப்படுத்துவதில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றும்,  ஆனால் அதில் மன நிறைவு அடைய முடியாது.
தனி மனித இடைவெளி, முக கவசம், கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளே கொரோனாவை தடுக்கும் சமூக ஆயுதம் என ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.

Post navigation

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராத வசூல் 11 கோடியை தாண்டியது
ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கை: கோவை தனியார் பள்ளிக்கு ‘சீல்’…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer