சென்னை:

கொரோனா பாதிப்பு காரணமாக  சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம்.

மிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சென்னையை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா ஹாட்ஸ்பாட்டானது சென்னைதனிமைப்படுத்துதலில் 168 தெருக்கள்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் வசித்து வந்த  பல தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் (ஏப்ரல்) 27ந்தேதி அன்று 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், 4 நாட்களில் மேலும் 65 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 233 ஆக உயர்ந்துள்ளது.

அந்த பகுதிகளில் தொற்று  பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, ஒலி ஒளி மூலம் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு  நிலவரம் குறித்து  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,