Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை:
தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக உயர்ந்து நிலையில், 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, ஒலி ஒளி மூலம் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது. இருந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் மட்டும் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உள்ளது.
தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 352 நபர்களில், 158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

