புதுடெல்லி:
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. அதில், 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு 4-ஆவது ஆண்டாக நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட் இதுவாகும்.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழலில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் 402 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.