டெல்லி:

லைநகர் டெல்லியில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த,  தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த காவல்நிலையம் மூடப்பட்டது.

டெல்லியில் இமாம் தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு கடந்த மார்ச் மாதம் நடை பெற்றது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா உறுதியானது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில்,  தப்லிகி ஜமாத் பாதுகாப்புப்பணி செய்த 16 போலீஸாருக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் 4 நாட்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த பணியில் மொத்தம் 52 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில்  16 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும், அவர்களில் 8 பேர் சாந்தினிமெஹல் காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து,  சாந்தினி மெஹல் பகுதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களும், அவர்களும்  குடும்பத்தாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த காவல்நிலையம் மூடப்பட்டது.