சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 4829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இன்று மேலும் 580 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5409 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் 316 பெருக்கு பதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றுவரை சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக இருந்து இன்று 2644 ஆகி உள்ளது.

அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் இன்று 32 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 356 ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டு ,மொத்த எண்ணிக்கை 246 ஆகி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்று கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி,  சேலம், சிவகங்கை, தென்காசி, திருவாரூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை..

[youtube-feed feed=1]