ஜாகர்த்தா

ந்தோனேசியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் தடுப்பூசி போடாதோர் மூன்று மடங்கு அதிகமாக உள்ளனர்.

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  இங்கு இதுவரை 37.18 லட்சம் பேர் உயிர் இழந்து இதுவரை 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   இங்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு கொரோனாவால் மரணம் அடைந்தோரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டோரை விட போடாதோர் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.  அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்டோரில்  4.1% மரணம் அடைந்துள்ளனர்.  அதே வேளையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோரில் 15.5% மரணம் அடைந்துள்ளனர்.

சில மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மிகவும் குறைவான எண்ணிக்கை மட்டுமே மரணம் அடைந்துள்ளனர்.  குறிப்பாக ஜாவா தீவுகளில் உள்ள பன்யுவாங்கி நகரில் கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 93% பேர் தடுப்பூசி போடாதோர் ஆவார்கள்.  மேலும் 6% பேர் முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் மற்றும் 1% பேர் இரு டோஸ்களும் போட்டுக் கொண்டவர்கள் ஆவார்கள்

இந்தோனேசியாவில் இதுவரை 18% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் 8% பேருக்கு இரு டோஸ்கள் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. இங்கு சீனா மற்றும் இந்தியாவில் உற்பத்தியாகும்  தடுப்பூசிகள் போடப்படுகின்றன.