சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், சென்னை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று (24ந்தேதி)  ஒரே நாளில் 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருவள்ளூரைச் சேர்ந்த 65 வயது ஆண், செங்கல்பட்டை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் 46 வயது மற்றொரு ஆண் என 3 பேர், ஒரே நாளில் உயிரிழந்தனர். அதுபோல,  சென்னை – தனியார் மருத்துவமனைகளில் முறையே 57, 62 மற்றும் 68 வயதில் 3 ஆண்கள் கொரோனாவுக்கு இரை ஆனார்கள். சென்னையை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும், 52 வயது ஆண் ஒருவரும் ஸ்டான்லி மருத்துவமனை யில் மரணம் அடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 111ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளத.
இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்து உள்ளது.