டெல்லி:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே வேளையில் கொரோனா பலி எண்ணிக்கையும் 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16,510 பேர் உயிரிழந்துளளனர்.

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இந்தியா முழுவதும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டன.

கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இதுவரை   கண்காணிப்பு வளையத்தில்  2,09,163 பேர் உள்ளார்கள்.  9154 பேர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள்: விஜயபாஸ்கர். இது வரை 743 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது: விஜயபாஸ்கர். 116 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தலைநகர் டெல்லி முடங்கியது. மும்பை, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திர, கர்நாடகா, தமிழகம் உள்பட பெரும்பாலான மாவட்டங்கள்  வெறிச்சோடி காணப்படுகிறது.

இதற்கிடையில், தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் இதுவரை நடஙநம கொரோனா சோதனை எவ்வளவு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் கீழே தரப்பட்டு உள்ளது.

தமிழகம்: (TN. Samples- 552. Negative- 503. Positive- 12. Pending- 40)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : 552

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 12

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 503

நிலுவையில் உள்ளது :  40

ஆந்திரா: (AP- Samples – 220. Positive: 7 Neg: 168. Pending- 45)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : 220

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 7

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 168

நிலுவையில் உள்ளது : 45

கர்நாடகா: (Karnataka- Samples- 1477 Neg- 1153 Positive-33. Rest pending)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : 1477

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 33

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 1153

நிலுவையில் உள்ளது : இல்லை

கேரளா: (Kerala: Samples – 4291. Positive: 95 Neg: 2987. Rest pending)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : 4291

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 95

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 2987

நிலுவையில் உள்ளது : இல்லை

ஒடிசா: (Odisha: Samples- 110 Positive: 2. Neg: 108)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : 110

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 2

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 108

நிலுவையில் உள்ளது : இல்லை

மகாராஷ்டிரா: (Maharashtra negative 1889, positive- 101)

இதுவரை கொரோனா சோதனை நடத்தப்பட்டவர்கள் : விவரம் இல்லை

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் : 101

கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் : 1889

நிலுவையில் உள்ளது : இல்லை