ய்பிதாவ்

மியான்மர் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் மயான ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

மியான்மரில் தற்போது கொரோனா மரணங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன.   சிறிய நாடான மியான்மரில் விகித அடிப்படையில் கொரோனா மரணங்கள் உலக அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் அரசு அறிவிப்பதை விட அதிக அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்வதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்றவாரம் மியான்மரின் மிகப் பெரிய நகரான யாங்கூனில் அமைந்துள்ள யேவே கல்லறையில் சென்ற வாரம் தினசரி 200 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.  சென்ற வருட கொரோனா மரணங்கள் எண்ணிக்கையைப் போல் இது இரு மடங்காகும்.   இதே நிலை மேலும் இரு நகரங்களிலும் காணப்படுகின்றது.

நாடெங்கும் தினசரி சுமார் 400 முதல் 500 பேர் கொரோனாவால் மரணம் அடைவதாகக் கூறப்படுகிறது.  சடலங்களை அகற்றும் மயான ஊழியரான போசெயின் என்பவர் தாம் மட்டும் தினசரி 40 சடலங்களை மயானத்துக்கு எடுத்து வருவதாகவும் இதைப் போல் ஏராளமானோர் நாடு முழுவதும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத யாங்கூன் நகர மயான ஊழியர் ஒருவர் “தினசரி கொரோனா மரண சடலங்கள் வருவது அதிகரித்து வருகிறது.  இது எங்கள் பணிச்சுமையை அதிகரிக்கிறது.  கொரோனாவால் ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரும் மரணம் அடைகின்றனர்.

இப்போது எனது குழுவில் மட்டும் 18 பேர் பணி செய்தும் ஏராளமான சடலங்கள் புதைப்பதற்குக் காத்துக் கிடக்கின்றன.  எங்களால் முடியவில்லை என்றாலும் எங்கள் பணிகளை நாங்கள் தள்ளிப் போட முடியாது.  எனவே தொடர்ந்து சடலங்களைப் புதைக்கும் பணிகளை தொடர்ந்து வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.