புதுடெல்லி:
உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்புக்கு குறித்த முழு விபரத்தை இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல் உணவு சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், முதல் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 1075-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 2058-ஆக உயர்த்தது.

தொடர்ந்து உலகில் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாக பரவி இந்த கொரோனா வைரஸ் மே 3-ஆம் தேதி 3023-ஆகவும், மே 5ல் 4058-ஆகவும், இருந்ததுடன் மே 7ல் 5409-ஆக உயர்ந்தது.இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடுவதற்கு, மகாராஷ்டிராவில் 43 நாட்களும், குஜ்ராத்தில் 47 நாட்கள், டெல்லியில் 65 நாட்களும் எடுத்து கொண்டுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.