சென்னை

மிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.  இம்முறை ஊரடங்கில் மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மற்றும் கடைகளைப் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.  அந்த கூட்டத்தில் முதல்வர் தற்போது முழு ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எனவே இந்த தளர்வுகள் தொடர வேண்டுமா என மற்ற கட்சியினரிடம் கருத்துக் கேட்டார்.

இதையொட்டி மற்ற கட்சியினர் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.  கூட்டத்தில் ஊரடங்கு விதிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தற்போதுள்ள நிலையில் ஊரடங்கு தொடர்வதால் பெரியதாகப் பலன் இருக்காது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் ரயில் போக்குவரத்து, அத்தியாவசிய தேவையின்றி மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.