தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 2,96,901 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காலத்தில் மக்கள் சேவையான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று திமுக எம்எல்ஏ குளித்தலை ராமருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.