உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

புதுடெல்லி:
லகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 57 லட்சத்து 61 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 753 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 701 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 21 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 67 லட்சத்து 54 ஆயிரத்து 56 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 824 பேர் குணமடைந்துள்ளனர்.

More articles

Latest article