சென்னை
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய சென்னை பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
சென்னையில் ஒரு தெருவில் 10 கொரோனா நோயாளிகளுக்கு மேல் காணப்பட்டால் அந்த பகுதி தீவிர கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. நகரில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று 375 பகுதிகள் தீவிர கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தது. கடந்த 9 ஆம் தேதி அன்று அது 725 ஆக அதிகரித்தது.
மத்திய சென்னையில் தீவிர கட்டுப்பாடு பகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடந்த மாதம் இறுதியில் காணப்பட்டதை விட இது 11 நாட்களில் இருமடங்கு அதிகம் ஆகி உள்ளது. இதே நிலை வடக்கு மற்றும் தென் சென்னையிலும் உள்ளது. இது குறித்து மண்டல வாரியான விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி வட சென்னை (1 – 5 மண்டலங்கள்)யில் 14% மத்திய சென்னையில் (6 முதல் 10) மண்டலங்கள் 60% மற்றும் தென் சென்னை (11-15 மண்டலங்கள்)யில் 26% பகுதிகள் தீவிர கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது அம்பத்தூர் (7 ஆம் மண்டலம்), தேனாம்பேட்டை (9 ஆம் மண்டலம்) கோடம்பாக்கம் (10 ஆம் மண்டலம்) வளசரவாக்கம் (11ஆம் மண்டலம்) ஆலந்தூர் (12 ஆம் மண்டலம்) மற்றும் அடையாறு (13 ஆம் மண்டலம்) ஆகிய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளன. இதில் வளசரவாக்கத்தில் மட்டும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு விக நகர், பெருங்குடி மற்றும் மாதவரம் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வரும் வேளையில் அண்ணா நகர், அடையாறு, அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
Thanx : Vijay Anand – Corona data analyst and Times of India