வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,257 பேர் அதிகரித்து மொத்தம் 48,90,544 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3601 அதிகரித்து மொத்தம் 3,20,121 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 19,07,323 பேர் குணம் அடைந்துள்ளனர்.  44,766 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,630 பேர் அதிகரித்து மொத்தம் 15,50,294 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1003 அதிகரித்து மொத்தம் 91,181 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,56,389  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,868 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,926  பேர் அதிகரித்து மொத்தம் 2,90,678 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 91 அதிகரித்து மொத்தம் 2,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 469  பேர் அதிகரித்து மொத்தம் 2,78,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 59அதிகரித்து மொத்தம் 27,709 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,96,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1162  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று 14.288 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,55,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 735 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 16,853 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4630 பேர் அதிகரித்து மொத்தம் 1,00,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 131 அதிகரித்து மொத்தம் 3156 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 39,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.