வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,616 உயர்ந்து 28,30,041 ஆகி இதுவரை 1,97,245 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,616 பேர் அதிகரித்து மொத்தம்28,30,041 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8174 அதிகரித்து மொத்தம் 1,97,245 பேர் உயிர் இழந்துள்ளனர். 7,96,698 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 58,523 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,764 பேர் அதிகரித்து மொத்தம் 9,25,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1951 அதிகரித்து மொத்தம் 52,185 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,10,432 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 15,097 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6740 பேர் அதிகரித்து மொத்தம் 2,19,764 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 357 அதிகரித்து மொத்தம் 22,524 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 92,355 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7705 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3021 பேர் அதிகரித்து மொத்தம் 1,92,994 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 420 அதிகரித்து மொத்தம் 25,969 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 60,498 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2173 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று 1,645 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,59,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 389 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 22,245 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1408 பேர் அதிகரித்து மொத்தம் 24,447 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 59 அதிகரித்து மொத்தம் 780 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5496 பேர் குணம் அடைந்துள்ளனர்.