கோவிட் –19 தொற்றுநோய் உலக அளவிலான நுகர்வோர் தேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், நுகர்வு பொருட்களின் தேவை குறைந்து சந்தைகள் பெரும் அளவில் தேங்கியுள்ளன. குறிப்பாக,  உலகெங்கிலும் உள்ள எண்ணெய் சந்தைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், அதன் விலையில் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து, கடந்த செவ்வாயன்று அதன் விலை 0 அமெரிக்க டாலருக்கும் குறைவானத்து. ஆனால், இந்த உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி இந்தியாவுக்கு உதவுமா?

கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு – குஷிங் சேமிப்பு கிடங்கு, குஷிங் – ஓக்லஹோமா, அமெரிக்கா

சிறப்பம்சங்கள்

  • உலகளாவிய எண்ணெய் தேவையில் மாற்றம் ஏற்படாவிடில், கச்சா எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும்
  • கோவிட் -19 தொற்றுநோய் பெரும்பாலான நாடுகளுக்கு அதன் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கியதை அடுத்து, எண்ணெயின் தேவை குறைந்துள்ளது.
  • தேவையின் அளவு மிகவும் குறைவான நிலைக்கு சென்றதால், மோசமான நிலைமையாக, கச்சா எண்ணெயின் விலை 0 டாலருக்கும் குறைவாக, எதிர்மறை பகுதிக்குச் சென்றன

தற்போதைய இந்த காலம், கொரோனாவினால் ஆபத்தான, நெருக்கடியான காலமாகி மாறியது மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தில் பலத்த எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவல்ல ஒரு ஊசலாட்டமான மற்றும் வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது.  ஆனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளிள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் எதனுடனும் ஒப்பிட முடியாத, உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மாற்றம் ஆகும்.  அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலைகள் வரலாற்றில் முதல் தடவையாக திங்களன்று $ 0 க்கு கீழே சரிந்ததால், ஒரே இரவில் எண்ணெய் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய வார்த்தைகளாக மாறிப் போனது.  இது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களின் முதலீடுகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியது. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள், பங்கு சந்தையில் அபாயகரமான நிலையில் இருந்தாலும், கோவிட் -19 தொற்றுநோயால் இடைநிறுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மீளும்போது, உலக அளவில் பெரும் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் குறைந்தபட்ச கச்சா எண்ணெய் விலை, அதன்  டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் அல்லது மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் நிறுவனத்தில் மைனஸ் 37.63 டாலர்களாக சரிந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு, விற்பனையாளர்கள் வாங்குபவர்கள் சரக்குகளை டெலிவரி எடுக்க தானே பணம் செலுத்தினர்.

மே மாதத்திற்கான டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை சற்றே சாதகமாக திரும்பினாலும், இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் (need to find current rate அண்ட் article time )ஒரு பீப்பாய் விலை மைனஸ் $4.6 ஆகவே உள்ளது. எண்ணெயின் தேவை உலக அளவில் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மீண்டும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சாவை சேமிப்பதற்கான இடப்பற்றாக்குறையை சந்தித்து வருவதாலும், வரும் காலத்திலும் உலக அளவிலான தேவையில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், விலையில் மேலும் கடுமையான சரிவை சந்திக்க வேண்டியிருக்கலாம். இதனால், வரலாற்றிலேயே முதன் முறையாக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC – ஒபெக்) மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு குறைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தேவை குறைந்த ஒன்று “மதிப்பற்றதாக”கும்

 கோவிட் -19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த வழிவகுத்ததிலிருந்து எரிபொருள் தேவை அதன் குறைந்தபட்ச அளவிற்கும் கீழே குறைந்துவிட்டது. எதிர்வரும் நாட்களில் அதன் தேவை மேம்படவில்லை என்றால் அது “பயனற்ற-மதிப்பற்ற”தாக  மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவில், WTI எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பக தொட்டிகள் கிட்டத்தட்ட அதன்  விளிம்பு வரை நிரம்பியுள்ளன. மேலும் சேமிக்க இடமில்லை என்பதே உண்மை. ஓக்லஹோமாவின் குஷிங்கில் எண்ணெய் சேமிப்பகம், ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி 72%  நிரம்பியிருப்பதாக அமெரிக்க எரிசக்தி நிர்வாகம் அறிவித்துள்ளது. எண்ணெயை சேமிக்க மேலும் இடமின்றி ஆகுமானால், எண்ணெயின் விலை என்பது ஒரு மதிப்பில்லாத பொருளாக மாறும் அபாயம் உள்ளதாக  பாப் யாகர், futures at Mizuho வின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “கச்சா எண்ணெயின் விலை மைனஸ் ஆக இருக்கும்போது, அதை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் உங்களுக்கு ஒரு டாலர் கொடுப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

எண்ணெய் வர்த்தகமும் அதன் ஒப்பந்தங்களும்

எண்ணெய் வர்த்தகங்கள் அனைத்தும் உலகெங்கிலும் ஒப்பந்தங்கள் மூலம் நடக்கிறது. எண்ணெய் என்பது உலகெங்கிலும் மிகவும் பிரபலமான வர்த்தகப் பொருட்களில் ஒன்று என்பதால், இதன் ஒப்பந்தங்களும் பங்குகளைப் போலவே, எதிர்கால பரிமாற்றங்களிலும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான சட்ட ஒப்பந்தங்களாகும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகும்போது ஒரு குறிப்பிட்ட அளவு (பீப்பாய்களில்) எண்ணெயை வாங்கவும், பெறவும் வேண்டும். கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்தது என்னவெனில், மே மாதத்திற்கான எதிர்கால பரிவர்த்தனைகள் மற்றும் விலைகள் குறித்த ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை அன்று காலாவதியாகும் முன்பே 100 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடைந்தது. இத்தகைய பங்கு வர்த்தக ஒப்பந்தங்கள் காலாவதியாகும் முன் ஒரு மாதம் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்பதால் இது பெரிய அளவிற்கான இழப்பு இல்லை.

ஆனால் மே மாதத்திற்கான ஒப்பந்தங்களை வைத்திருந்த முதலீட்டாளர்கள் எண்ணெய் விநியோகத்தை எடுத்து கூடுதலாக,  சேமிக்கவும் செலவளிக்க விரும்பவில்லை. பிரச்சனையில் இருந்து தப்பிக்க மக்களுக்கு அன்று பணம் கொடுத்தனர். ஆனால், மற்ற முக்கிய எண்ணெய் நிறுவனங்களை பொறுத்தவரை நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. BRENT கச்சா எண்ணெய் நிறுவனம், அதன் எதிர்கால விலையில் 3.6% வீழ்ச்சியடைந்த பின்னரும் 25 டாலருக்கு நிகராக உள்ளது. மே மாதத்திற்கான டபிள்யூ.டி.ஐ எதிர்கால ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் இது மோசமானதல்ல. மேலும், ஜூன் மாதத்திற்கான டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒப்பந்தங்கள், அதிக மதிப்பில் வர்த்தகத்தைக் கொண்டுள்ளன (21 டாலர்களுக்கு மேல்). ஜூலை மாதத்திற்கான ஒப்பந்தங்களும் 26 டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

இவை அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் நிலைய பிரதிபலிக்கிறது. இருந்தாலும், எதிர்காலத்தில் எண்ணெய் பொருட்களுக்கான தேவை உயர்வதைப் பொறுத்தே எண்ணெய் வர்த்தகத்தின் நிலைமையைக் கணிக்க முடியும். எளிமையாக, புரியும்படி கூறுவதானால், எண்ணெய் தேவை தற்போதைய அளவிலேயே நீடித்தாலும் அல்லது கொரோனா காரணமாக மற்றும் இடை நிறுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளால், மேலும் குறைந்தாலும், உலக அளவிலான எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஜூன் மாத எதிர்கால ஒப்பந்தங்களின் காலாவதிக்கு முன்னர், உலகெங்கிலும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்ற நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் கோவிட் -19 நிலைமையைக் கணிக்க இது சரியான நேரமில்லை என்றும், அதற்கு இன்னும் சற்று காலம் செல்ல வேண்டும் என்றும்  நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கான எண்ணெயின் தேவையை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 30 மில்லியன் பீப்பாய்கள் என்பது உலக அளவிலான தேவையில் 30% ஆகும். இந்த பெரும் அளவிலான உபரி எண்ணெய் இருப்பு  கடந்த சில மாதங்களாக உலகளவில் சேமிப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களும், வல்லுனர்களும் இந்த பெரும் அளவிலான உபரி இருப்பை செலவழிக்க நீண்ட காலம் தேவைப்படும் என்றும், இது நீண்ட காலத்திற்கு தேவைக்கும்-விநியோகத்திற்குமான விகித்தத்தை சிக்கலில் ஆழ்த்தி குழப்பத்தை உருவாக்கும் என்றும் கணித்துள்ளனர். விஸ்டம்ட்ரீ அசெட் மேனேஜ்மென்ட்டின் நிலையான வருமான யுக்திகளின் தலைவரான கெவின் ஃபிளனகன் ஊடகங்களில் பேசும்போது, “ எண்ணெய்க்கான தேவை எப்பொழுது வேண்டுமானாலும் மீளலாம். அது கூடிய விரைவிலும் இருக்கலாம்” என்றார். மேலும் அவர் கூறியது என்னவெனில், “எரிசக்தி சந்தையின் தற்போதைய நிலை உங்களுக்கு சொல்வது என்னவெனில், தேவை இப்போதைக்கு மீள வழியில்லை என்றும், விநியோகத்தில் தொய்வு ஏற்படலாம்” என்றும் அவர் விளக்கினார்.

விலை வீழ்ச்சியும் இந்தியாவும்

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் இந்திய மக்கள் எவ்விதத்திலும் பயனடையவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த நேரத்திலும் குறையாது. இந்திய கூடை – ஓமான், துபாய், பிரெண்ட் நிறுவனங்களின், சராசரி கச்சா எண்ணெயின் சராசரி விலையே, இந்திய கச்சா எண்ணெயின் இறக்குமதியின் விலையைக் குறிக்கிறது. இது தற்போது ஒரு பீப்பாய்க்கு $20.56 ஆக உள்ளது. இது இந்தியாவின் முந்தைய இறக்குமதி விலையை விட  குறைவு என்றாலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதிலும் குறிப்பாக முழு தேசமும் முடக்கப்பட்டு எண்ணெய்கான எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், இந்தியாவின் அனைத்து சேமிப்பு கிடங்குகளும் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையிலும் கூட விலையில் குறைப்பு இல்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய அம்சம் ஆகும்.

தற்போது எண்ணையின் விலை சலுகைகள் நிறைந்ததாக இருந்தாலும், இந்தியா தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதியை தவிர்த்து வருகிறது. ஏனெனல், இக்காலகட்டத்தில், எண்ணெய் வாங்குவது இலாபகரமானதாக தோன்றினாலும், டாலருக்கு நிகரான பரிமாற்ற விகிதம் அதிகமாக இருப்பதால் உண்மையில் இந்தியா அதிக செலவு செய்ய நேரிடும். ரூபாய் தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 25 , ஏப்ரல் நிலவரப்படி  ரூ. 76. 32 க்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.  இந்தக் குறுகியக் கால குறைந்த கச்சா எண்ணெய் விலைகள் நுகர்வோருக்கு எவ்வித நன்மைகளையும் அளிக்கப்போவது இல்லை. பெரும்பாலும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளின் பெரும் பகுதி அரசாங்க வரிகளால் ஆனதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்பதே உண்மை. மொத்தத்தில், சலுகைக்கான விலைகள் இந்தியாவுக்கு ஓரளவுக்கு இலாபம் என்றுக் கொண்டாலும், நாடு முழுவதும் தேவைகள் குறைந்து விட்டதாலும், அனைத்து சேமிப்பகங்கள் மற்றும் பம்புகள் நிரம்பியுள்ளதாலும் யாருக்கும் பயன் இல்லை. உலகளாவிய கட்டுபாடுகள் இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மட்டும் சிக்கலில் சிக்கித் தவிக்கக்கூடும். அவ்வளவே!

தமிழில்: லயா