டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 819 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிபிப்ல உலக அளவில் 3வது இடத்தில் இருந்து வரும் இந்தியா தினசரி பாதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) 69,921 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு36,91,167 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில், 65,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 28,39,883 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 28,39,882 பேருடன் 76.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 21.59 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி 65,288 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா உயிரிழப்பு 1.78 சதவீதம் ஆக உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.