டெல்லி: நாடு முழுவதும கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை உச்சமடைந்துள்ளது. இது அடுத்த 4 வாரங்கள் மேலும் கடுமையாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,15,736 பேருக்கு தொற்று உறுதியானதுடன் 630 பேர் பலியாகினர் தற்போதைய நிலையில் சிகிச்சையில் இருப்போர் மொத்த எண்ணிக்கை 8,43,473 பேர் உள்ளனர்.
இந்த நிலையில், மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தொடர்பாக நாளை (8 ஆம் தேதி) பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நேற்று கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்திய நிலையில், நாளை பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
[youtube-feed feed=1]