சென்னை:

காவல் துறையில் பணிபுரிபவர்கள்  பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிஜிபி  அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கைஅனுப்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற காவல்ஆய்வாளர், முறைகேடு தொடர்பாக, தனது பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், அதை ரத்து செய்து, அதற்கான பண பலன் வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

உயர்நீதி மன்ற திபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நடைபெற்று வரும் இந்த வழக்கின், கடந்த விசாரணையின்போது, காவல்துறையினர் மாமும் வாங்குவதை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், மாமுல் வாங்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது,  காவல்துறை போன்று சீருடை பணிகளில் இருப்பவர்கள்  பணியின் போதும், பணியில் இல்லாத போதிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் அல்ல என்று உத்தரவிட்டது.

பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவரின் பணிப் பதிவேடுகள் மற்றும் நடத்தையை ஆய்வு செய்வது முக்கியமானது.

காவல்துறை நடத்தை விதிப்படி, காவல்துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி, பணம் வாங்குவது வரதட்சணை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் பரிசுப்பொருட்கள் என்ற பெயரில் பூங்கொத்து, பழங்கள் மற்றும் பல பொருட்களை பெற முடியாது.

ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு பூங்கொத்துகள், பழங்கள் பரிசாக வழங்கப்படுகிறது தொடர்கிறது. ஆகவே வல்துறை நடத்தை விதிகளை காவல்துறையில் பணியிலிருப்பவர்களுக்கு டிஜிபி நினைவூட்ட வேண்டும் என்று கூறினார்.

வரதட்சணை பெறுவது, பரிசுப் பொருட்கள், வெகுமதிகளை பரிமாறிக்கொள்வது காவல்துறை நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, இதனை தடுக்க, தமிழகத்திலுள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் 6 வாரத்திற்குள் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.