டில்லி,

“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இனியும் ஒத்திப்போட முடியாது” என்று பிரணாப் முகர்ஜி தனது ராஷ்டிரபதி பவன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்களை,  பாகிஸ்தான் ராணுவம் சிதைத்து, தலையை துண்டித்து கொடூர செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த  கொடூர செயலுக்கு இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம், இந்த கொடூர செயலுக்கு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த, கூட்டு நடவடிக்கைகளை இனியும் ஒத்திப்போட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்க சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.