தேவையான  பொருட்கள்;

பால் – 1 லிட்டர்

ஃப்ரெஷ் கிரீம் – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

ஜி.எம்.எஸ் – 1 டீஸ்பூன்

ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் – 1/2 டீஸ்பூன்

ஜெல-ட்டின் – 1 டீஸ்பூன்

மாம்பழ விழுது – 1/2 கப்

பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் – 1/2 கப்

மாம்பழ எசென்ஸ் – 2  டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை நன்றாகக் காய்ச்சவும் வேண்டும். அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் ஜி.எம்.எஸ்-ஐக் கலந்து கொள்ளவும். மீதம் இருக்கும் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற விடவும்.. ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை சேர்க்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவேண்டும். அதனுடன் சர்க்கரை கலந்து  காய்ச்சி ஆறவைத்த பாலுடன் இவை இரண்டையும் சேர்த்து கடைசியில் ஃப்ரெஷ் கிரீம், எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவை, மாம்பழ விழுதைச் சேர்த்து, ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். அதை சிறிய கப்களில் நிரப்பும்போது மாம்பழ துண்டுகளை சேர்த்து ஃப்ரீசரில் வைத்தால் சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் ரெடி.!