டில்லி:
மையல் காஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம், செப்டம்பருக்குள் பதிய வேண்டும் என  என மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் எண் சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ந் தேதி வரை நீடித்துள்ளது மத்திய அரசு.
ban-aathar
ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கி வருகிறது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.
அதன் அடிப்படையில், சமையல் கேஸ் நேரடி மானியத் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி,முதலில் வாடிக்கையாளர்கள் சமையல் காஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்க வேண்டும்.  அதை தொடர்ந்து காஸ் மானியம் நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, தங்களது கேஸ் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர். தற்போது  வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து.
இதையடுத்து வங்கிகளில் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக மக்கள் வங்கியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வங்கி சேவையும் பாதிக்கப்படுகிறது. மேலும் பலர் இன்னும் ஆதார் அட்டை எடுக்காமலும் இருக்கிறார்கள். அவர்களை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதனால், சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை  நவம்பர் 30-ந் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
ஏற்கனவே  செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் வங்கி மற்றும் கேஸ் நிறுவனங்களிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டும் என்றும், ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
++++