சென்னை:  விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள  மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா  என்பவர் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து  வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

 

சமையல் கலைஞராக கொடிகட்டி பறந்த  மாதம்பட்டி ரங்கராஜ், மேலும் புகழாசையில்,   விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் நடுவராக கலந்துகொண்டது மூலம் திரையுலகில் கால் பதித்த மேலும் பிரபலமானார். அவரது, அழகான மனைவி இருக்கையில், தனக்கு ஆடை வடிவமைப்பாளராக சேர்ந்த இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்ட நிலையில், இன்று காவல்நிலையத்தை நாடி செல்லும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளார்.

பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை தற்போது அல்லாடி வருவதுடன் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்க்கிறது. . பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். சிறுவாணி தண்ணீருடன் வந்து அவர் சமைத்து வழங்கும் உணவை ருசிக்க  தனி கூட்டமே உள்ளது. அவ்வளவு புகழ்வாய்ந்த ரங்கராஜ், சினிமா மற்றும் திரையுலக மோகத்தால், தற்போது சீரழிந்து கேவலப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ்,   2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும்  சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காத நிலையில், அவரது ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும், ஜாய் கிரிஸில்டா, தனக்கும் மாதம்பட்டிக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அத்துடன் தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். தனது கர்ப்பத்தக்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் என்றும் கூறியிருந்தார்.

இந்த புகைப்படம் வைரலானது. மேலும் கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியது.  மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து,  மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்தார். மேலும், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதி உடன் கலந்துகொண்ட  வீடியோ வெளியானது. ஆனால், அதில், இருவரும் பேசாமல் தனித்தனியே இருந்தனர். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில், நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர், 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். 2023ம் ஆண்டு, இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். தற்போது தனியாக வசித்து வரும் ஜாய் கிரிசில்டா மாதம்பட்டியுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், தற்போது அவர்மீது புகார் கொடுத்துள்ளார்.