டெல்லி:

ன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டுள்ள நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள், தங்களது கடைசி விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்று டெல்லி திகார் சிறை டைரக்டர் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.

நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் இறப்பதற்கு முன்பு, அவர்களின் கடைசி விருப்பம் நிறைவேற்றப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படி, அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள்  எந்த கடைசி விருப்பத்தையும் தெரிவிக்க வில்லை என்று மரணதண்டனை நடந்த திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இரவு குற்றவாளிகள் முகேஷ் & வினய் இரவு உணவு சாப்பிட்டனர் & அக்‌ஷய் நேற்று இரவு தேநீர் மட்டுமே சாப்பிட்டார். வினய் சற்று அழுதார், ஆனால் 4 குற்றவாளிகளும் அமைதியாக இருந்தனர்.

இன்றுகாலை வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர்,  நீதிமன்ற உத்தரவுபடி, குற்றவாளிகள் 4 பேருக்கும்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு  சில நிமிடங்களுக்கு முன்பு, நான்கு நிர்பயா குற்றவாளிகளை நெறிமுறையின்படி ஒரு மருத்துவர்  பரிசோதித்தார்.

அதன்பின்பே அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.  அவர்களது உடல் சுமார் 30 நிமிடம் தொங்கவிடப்பட்டன. பின்னர், நான்கு குற்றவாளிகளின் உடல்களும் கயிற்றில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர், நான்கு பேரும் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

அதன்பிறகே, அவர்களது உடல்கள் இப்போது பிரேத பரிசோதனைக்காக தீன்தயால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குற்றவாளிகளின் குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்படும் என்றார்.