விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தலைமறைவான நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட முன்னாள் டிஜிபி ராஜேஸ்தான், பணி நிமித்தமாக பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அழைப்பு விடுத்து, அவரிடம் பாலியல் சேட்டை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிா்த்து ராஜேஷ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜன.6-ஆம் தேதி தீா்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இ
தற்கிடையில், விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையிலிருந்ததால் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தீா்ப்பும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், அவர் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, அவரது மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடர்ந்து, அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
.இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்ய காவல்துறையினர் மார்ச் 9ந்தேதி சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை என்று தெரிய வந்தது. விசாரணையில், அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுவ் -அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.