ஷாங்காய்:  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து ஒரே காரில் ரஷிய அதிபர் புதினுடன் பயணித்த பிரதமர் மோடி, புதினுடன் நடத்தப்படும்உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை  என குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் மோடி,ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டுஇ 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா சென்றார். மாநாட்டின் ஒருபகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். இந்த மாநாட்டில் ப டி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்படப ல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.  இந்த சந்திப்பு உலக நாடகளுடையே பெரும் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, சீனா அதிபர் மற்றும் ரஷிய அதிபருடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படகிறது.

இந்த நிலையில்,   ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புஉச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து, ஜனாதிபதி புதினும் நானும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை” என்று தெரிவித்தார். அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SCO உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி புடினும் நானும் எங்கள் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் நுண்ணறிவு மிக்கவை  என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,   ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் ஆகியோரை சந்தித்தார். மேலும், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.