சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

வைரமுத்துவும், அவரது மகன் மதன் கார்க்கியும் பாடல்களை எழுதுகின்றனர். அக்டோபர் 6 ஆம் தேதி இந்தப் படத்தின் பாடலொன்று மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இதற்காக இலங்கையிலிருந்து மும்பை வந்திருந்தார் பாடகி யோகானி . பாடகி யோகானி சிங்கள இராணுவத் தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கும் ஹாரிஸுக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.