சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்திஅதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்து அநாகரிகமாவும், பெண்கள் குறித்து தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஏற்கனவே பல முறை இதுபோன்று பேசிய அவர், உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து ந்கக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, அவரது கட்சி பதவியை மட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பறித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், “இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஆனால் அவரதுக்கு கண்டனங்கள் தொடர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பொன்முடியை அவரது குடும்பதாருடன் இணைத்து கழுவி ஊற்றி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக ஏற்கனவே அறிவித்தபடி, பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் கையில் செருப்புடன் போராட்டம் நடத்தினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக முக்கிய பெண் நிர்வாகிகள் மற்றும் பெண் தொண்டர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்
பெண்கள் மீதான அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி! காளியம்மாள் காட்டம்…