சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது பேச்சு வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன்.
ஏற்கனவே மாற்றுதிறநாளி குறித்து பேசிய ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை தமிழ்நாடு அரசு கைது செய்ததுபோல, அமைச்சர் துரைமுருகனையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் பலர், பெண்கள் மற்றும் சாதிய ரீதியில் அவ்வப்போது பேசி சர்ச்சைகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மாற்றுத்திறனாளிகளை தவறான பெயர் கொண்டு உச்சரித்து பேசியது கடுமையான கண்டனங்களை பெற்றது. இதற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தனர்.
மேலும், எதிர்க்கட்சிகளும் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதுமட்டுமின்றி சமுக வலைதளங்களிலும் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு குறித்து பேசிய ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் அன்பில் மகேஸ் உள்பட பலர், அமைச்சர் துரைமுருகனை விமர்சனம் செய்யாது குறித்து விமர்சனம் எழுந்தது. மேலும், அமைச்சர் துரைமுருகனை, ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவை கைது செய்ததுபோல கைது செய்ய வேண்டும் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை தவறான பெயர் கொண்டு உச்சரித்ததாகக் கூறி அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்”” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன்.
கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெண்கள் குறித்து ஆபாசக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் துரைமுருகன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக அமைச்சர்களின் இதுபோன்ற பேச்சுக்கள் தமிழக மக்கள் மத்தியில், கட்சி மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்