சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்த அருவறுக்கும் வகையில் பேசிய திமுக எம்பி ஆ.ராஜா பதில் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராஜா பதில் அனுப்பி உள்ளார்.

கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய திமுக எம்பி ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வரும், ராசாவின் விமர்சனம் குறித்து கண்கலங்கினார். இதையடுத்து, தனது தவறுக்காக மன்னிப்பு கோருவதாக ராசா அறிவித்தார்.
இதற்கிடையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, தேர்தல் ஆணையம் ராசா பதில் அளிக்க இன்று மாலை வரை அவகாசம் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், தனது மீதான அவதூறு நோட்டீசுக்கு ஆ.ராசா மறுப்பு தெரிவித்து பதில் அனுப்பி உள்ளார்.

Patrikai.com official YouTube Channel