சென்னை: தமிழக முதல்வரின் தாயார் குறித்து அருவறுப்பான முறையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ ராசா பெயர் நீக்கம் செய்தும் அறிவித்துள்ளது.
திமுக எம்.பி. ஆ. ராசா தேர்தல் பரப்புரையின்போது, தரங்கெட்ட வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் தாயார் குறித்து அறுவருப்பபாக பேசியிருந்தார். நல்ல உறவில் சுகப்பிரசவத்திற்கு பிறந்தவர் ஸ்டாலின் .கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் ஈபிஎஸ் என விமர்சித்து இருந்தார். இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் ராசா சார்பில், தேர்தல் ஆணையத்துக்கு நேற்று பதில் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராசா பிரசாரம் செய்ய தடை செய்து அறிவித்துள்ளது. அதன்படி, ராசா, அடுத்த 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்து விளக்கமளித்தது திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசாவின் பெயரை நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் விதிகளை மீறி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் இனி எச்சரிக்கையுடன் பேசவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது