சென்னை: கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த 2400 ஒப்பந்த செவிலியர்கள் திமுக அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி சென்னை உள்படபல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மீது அரசு விரட்டி வருகிறது.

இநத் நிலையில், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, செவிலியர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து அச்சுறுத்திய காவல்துறையினர், அவர்களை அதிகாலை 3மணி அளவில் வெளியேறச் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால்,   ஒப்பந்த செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் நிரந்தர பணி வழங்க முடியாது என திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி வருகிறார்.

இந்த நிலையில், இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்களை,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.. அவர்கள் மத்தியில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்

[youtube-feed feed=1]