சுவீடன் நாட்டை சேர்ந்த சொகுசு பேருந்தான ஸ்கானியா உலகின் முன்னணி சொகுசு பேருந்தாகும். இந்நிறுவனம், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் குழும நிறுவனமாகும்.

ஸ்கானியா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹென்ரிக் ஹென்ரிக்சன் ஸ்வீடன் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “இந்தியாவில் ஒப்பந்தங்களை பெறவதற்கு லஞ்சம் கொடு்க்க வேண்டி இருந்தது” என்று கூறியிருந்தார்.

2007-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது சேவையை துவங்கிய ஸ்கானியா 2011-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் அருகில் உள்ள தொழிற்பேட்டையில் தனது தொழிற்சாலையை அமைத்தது.

2017 ம் ஆண்டு ஸ்வீடன் பயணத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-யுடன், ஸ்கானியா நிறுவன செயல் தலைவர் ஹென்ரிக் ஹென்ரிக்சன் மற்றும் புதிதாக செயல் தலைவர் பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டியன் லெவின்

தற்போது இந்த தொழிற்சாலையை மூடிவிட்டதாகவும், இந்திய சந்தையில் தங்கள் பேருந்துகளை விற்பதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள தங்கள் விற்பனை நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டி இருந்ததாலும், அங்குள்ள எங்கள் நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு இதில் தொடர்பு இருந்ததாலும், இந்த முடிவு எடுக்க வேண்டி இருந்தது என்றும் கூறினார். இந்தியாவில் இதுபோன்ற ஒரு ஊழலை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

விற்பனைக்காக பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது 2017-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது, இங்குள்ள ஒரு சுரங்க நிறுவனத்திற்கு சுமார் 86 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் பெறுவதற்காக எங்கள் பேருந்தின் சேசிஸ், என்ஜின் எண் உள்ளிட்டவைகளை போலியாக மாற்றி விற்பனை செய்த நிகழ்ச்சியும் அரங்கேறி இருக்கிறது.

இதுகுறித்து இதுவரை காவல்துறையில் புகார் ஏதும் அளிக்க படவில்லை என்று தெரிவித்த அந்த அதிகாரி, இந்தியாவின் ஏழு முக்கிய மாநிலங்களில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது என்றும்,

இந்தியாவின் முக்கிய அமைச்சர் ஒருவர், 2016-ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காக, தனது மகனின் நிறுவனத்தின் பெயரில் ஸ்கானியா சொகுசு பேருந்து ஒன்றை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டார் என்று தெரிவித்த அவர்,

இந்த பேருந்து இப்போது எங்கு உள்ளது, யார் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இது குறித்து ஸ்வீடன் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.