நெய்வேலி

நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பலர் பணி புரிந்து வருகின்றனர்.    தங்களை நிரந்தரம் செய்வது,  ஊதிய உயர்வு உட்படப் பல கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர்.   ஆனால் நிர்வாகம் அவர்களது கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளவில்லை.  இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒரு பொதுக் கூட்டம் நடை பெற்றது.

அதில் தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.   கூட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு செயலர் அமிர்தலிங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  “ஏற்கனவே தெரிவித்திருந்த படி நாளைய தினம் (அதாவது இன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.    வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.   நிர்வாகம் ஏற்கவில்லை எனில்  ஜனவரி முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது.