சென்னை:

மிழகத்தில் கொரோனாபாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று  மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளூரில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உள்பட ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழுப்புரத்தில் மேலும் 15 பேருக்கு உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில், நேற்று (23ந்தேதி) ஒரே நாளில் புதிதாக  2,516  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தையடுத்து, மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை கொரோனாவில் இருந்து 35,339பேர் குணமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும்  833 ஆக உயர்ந்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம்:

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4,139-ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், மாவட்டத்தில்  1,945 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,027 பேர் குணமடைந்துள்ளனர் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்:

திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில்  2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டதிற்குட்பட்ட,  பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த  2,917ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் நேற்று தமிழக அரசு அறிவித்துள்படி கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,826ஆக உள்ளது.  இதுவரை  1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை   44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில்  தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்திலும்கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 632-ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.