சென்னை:  சென்னை மற்றும் புறநகர்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும்   புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  இதனால் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. த கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது. இதனால், சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்,  பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. இதனால்,  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் உ யரம் 24 அடி.   ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் தற்போது 22.07 அடி உயர்ந்து உள்ளது. அங்கு தற்போது   நீர் இருப்பு 3,138 மில்லியன் கனஅடி. ஏரியில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர். அதாவது  104 கனஅடி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது.

அதே வேளையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 162 கனஅடியில் இருந்து 451 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியாக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல்,  பூண்டி,  செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை  ஆகிய  5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக,   இன்று  (24ந்தேதி) காலை நிலவரப்படி  மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதம் ஆகும்.

சென்னை அருகே உள்ள புழல்  ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து  189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடி.  இன்று காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  இதில் 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருகிறது.10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது.   தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.