சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருவதாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்,பட்டு, திருவள்ளுர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழைத பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, இன்று 28 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர். சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வரும் நிலையில், பெரும்பாலான சாலைகளில் தேங்கும் தண்ணீரை அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலைய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சிறிதுநேரம் வானில் வட்டமடித்து, நிலைமையை தெரிந்த பின்பே ன் தரையிறக்கப்பட்டு வருகிறது. அதுபோல வெளிநகரங்களுக்கு புறப்படும் 15 உள்நாட்டு விமானங்களின் சேவையும் தாமதமாகியுள்ளது. அதேபோல, மும்பைக்கு செல்ல வேண்டிய கொச்சி விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னைக்கே மீண்டும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.