தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆதரவு போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய துணை ராணுவப்படை வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
தமிழகத்தில் பரவலா நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அடுத்து, மாநில அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு மீதான தடை விலக்கப்பட்டுவிட்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஆனால் போராட்டக்காரர்கள், நிரந்தர தீர்வு வேண்டும் என்ற முழக்கத்துடன் தொடர்நது போராடிவருகிறார்கள். இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பதாக அறிவித்திருந்த முதல்வர் பன்னீர்செல்வம் தோல்வி முகத்துடன் சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் போராட்டத்தை முடவுக்குக் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாகுவும், அதை மாநில அரசு பரிலீசிலிப்பதாக மட்டும் தெரிவித்ததாகவும் இதனால், போராட்டத்தை ஒடுக்க, துணை ராணுவப்படையை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பதாக தககவல்வெளியாகி உள்ளது.
குடியரசுதினத்தை தமிழகத்திலும் வழக்கம்போல கொண்டாடி விட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக இருப்பதால் இந்த நடவடிக்கை என்றும்சொல்லப்படுகிறது.