சென்னை: ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் … என்ன உறவு? திமுக எம்.பி. தயாநிதிமாறன் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திமுகவின் மற்றொரு எம்.பி. ஆ.ராசா, முதல்வரின் தாயார் குறித்து அருவறுப்பாக பேசியது சர்ச்சையான நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சு,  மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பபதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது..இதையொட்டி அரசியல் களம் சூடுபறக்கிறது. அதே வேளையில் சர்ச்சைகளும் கொடிகட்டி பறக்கின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது தனிமனித தாக்குதல்கள் தலைவிரித்தாடுகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது என்றே கூறலாம்.

சமீபத்தில் ஆ.ராசாவின் தரங்கெட்ட பேச்சு, சர்ச்சையான நிலையில்,  மற்றொரு திமுக எம்.பி.யான தயாநிதி மாறனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதார். கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் பேசிய தயாநிதிமாறன்,   தமிழ்நாட்டில் காலூன்ற  நினைக்கும் பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருகிறது.  தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க முடியாது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது அதிமுக. ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதல்வர் பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார்.  அப்பபடியென்றால், அது என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் கேள்வி கேட்டால் தவறு என்பார்கள் என தயாநிதிமாறன் பேசினார்.

ராசாவை தொடர்ந்து, தயாநிதி மாறனும் தரங்கெட்ட வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.