பிரிக்க முடியாதது பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு!? கள்ளக்குறிச்சியிலும் பரபரப்பு…..

Must read

கள்ளக்குறிச்சி: பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாததுபோலும். கள்ளக்குறிச்சியிலும் பாஜகவினர் பிரியாணிக்கு முண்டியடித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, தமிழகத்தில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இதைத்தொடர்ந்து,  கள்ளக்குறிசியில் பாஜக நிர்வாகிகள் மாநாடு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில்,  பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,  மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உள்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் முகக்கவசம் அணியாத நிலையில், அழைத்து வரப்பட்ட தொண்டர்களும்,மேடையின் பின்பகுதிக்கு சென்று பணம் பெறுவதையே குறியாக இருந்தனர். பணம் கிடைத்ததும், பலர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற அவலங்களும் நடந்தேறியது. இதனால், கூட்டமும் சிறிது நேரத்தில் முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கூட்டத்தின் பின்புறம், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்காக  இரண்டு மினி டெம்போவில் உணவு பொட்டலம் கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்ததொண்டர்கள் பிரியாணி பொட்டலாமா? எனக்கும் கொடுங்க என கூறிக்கொண்டு முண்டியடித்து வாங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அந்த பொட்டலத்தில் வெறும் தக்காளி சாதம் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். செலவுக்கு பணம், பிரியாணி என கூறி கூட்டத்திற்கு அழைத்து வந்துவிட்டு வெறும் தக்காளி சாதத்தை தருகின்றனர் என வசைபாடிக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.

பாஜகவினர் நடத்தும் பெரும்பாலான கூட்டங்களில், இதுபோன்ற பிரியாணி கலவரம் தொடர்ந்து வருகிறது.  ஏற்கனவே  ஏற்கனவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக  தமிழகம் முழுவதும பாஜக  நடத்திய பேரணியின்போதும், அதில் கலந்துகொண்டவர்கள் பிரியாணிக்கு அடித்துக்கொண்டதுடன், பிரியாணி அண்டாவையே தூக்கிச்சென்ற சம்பவங்களும் அரங்கேறியது.

அதைத்தொடர்ந்து,  திருப்பூரில் பாஜக பேரண நடத்தும், அந்த பகுதியைச் சேர்ந்த  பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பிரியாணி சங்கம் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்த விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போதும் பாஜக கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் நபர்கள் பிரியாணிக்கு அடித்துகொண்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பார்வையில் சொல்லப்போனால் , பிரிக்க முடியாதது பாஜகவுக்கும் – பிரியாணியும் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

More articles

Latest article