சிட்னி:

ஸ்திரேலியாவில் அடிக்கடும் ஏற்படும் தீ விபத்துக்களால் சிட்னி நகரம்  புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது,  ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள புதர்களில்  தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.  கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

வறட்சியான வானிலை காரணமாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் காட்டு தீ விபத்து ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம்  ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பயங்கரமான காட்டுத் தீ பரவியது. இதன் காரணமாக,  சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாகின. அத்துடன்  2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தீக்கு இரையானது. தீயை   அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், இறுதியில், ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டு, தீயின் போது கொட்டி கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அங்கு தற்போது  பல இடங்களில் தீ பற்றி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, சிட்னி நகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு  வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த காட்டுத்தீயானது மேலும்  மூன்று வாரங்கள் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தால் அங்கு வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.