சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான தேதிகளையும் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.
2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழகஅரசு!